தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாகப்பட்டிருக்கின்றது. இனிப்பு, கார வகைகள், பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான […]
