மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிமொழி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். உலகில் தோன்றிய மூத்த குடி பேசிய முதுமொழி தமிழ்மொழி எனக்கூறி அனைவரும் தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறினார். […]
