பேராசிரியர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி திறக்காததால் வருமானத்திற்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள தேவதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் வீரநாககவுடா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 வருடங்களாக கவுரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வீரநாககவுடா வருமானம் […]
