கிராமப் பகுதிகளில் சிறுத்தை புகுந்து ஆடு, பூனைகளை வேட்டையாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜிலேப்ப நாயக்கனூர் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது. மேலும் 2 பூனைகளையும் […]
