தூத்துக்குடியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பலின் உண்மை சிசிடிவி காட்சியினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, குரும்பூர், கயத்தாறு, சாயர்புரம் சேரகுளம் , திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். […]
