ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீளவிட்டான் பகுதியில் பொன்முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனது வீட்டில் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சந்தனராஜ் ஆடுகளை வீட்டின் அருகில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சந்தனராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
