ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் ,பிராந்தியங்கரை ,மூலக்கரை வடமழைமணக்காடு மற்றும் கத்திரிப்புலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர் .இதுதொடர்பாக கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆடு […]
