ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் 2 ஆடுகளை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சங்கராபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(26), ஜெயராம்(35), முத்துவேல் (44), முருகேஸ்வரன் (40) ஆகியோர் இணைந்து மரிமூர்புலத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் ஆட்டுக்கிடை போட்டு சுமார் 600 ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகுமார் தென்னந்தோப்பிற்கு அருகே உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். இதனையடுத்து போடிபுதூரை சேர்ந்த ரவிராஜா(29). பிச்சைமணி(35), முருகன்(50) […]
