மர்ம விலங்கு கடித்து ஆடு பலியான நிலையில், 3 ஆடுகள் படுகாயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகளை ஈஸ்வரி பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது 4 ஆடுகள் மயங்கி கிடந்ததை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். அதில் ஒரு ஆடு இறந்து கிடந்தது. மற்ற 3 ஆடுகள் […]
