ஆடுகள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி என்ற மகன் உள்ளார். இவர் கோவில்பட்டி பகுதியில் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது திடீரென மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் காணாமல் போனது. இது குறித்து திருப்பதி கடந்த 26-ம் தேதி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
