ஆடுகளை திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளங்கோ நகர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மாயாண்டி தனது வீட்டில் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளார். அப்போது மேய்ச்சலுக்கு அனுப்பிய ஆடுகளில் 2 ஆடுகளை 2 மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாயாண்டி […]
