கடை சுவரில் துளையிட்டு வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் பைசல் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டின் எதிரில் நகை அடகு மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பைசல் அகமது வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை பார்த்து பைசல் அகமது அதிர்ச்சியடைந்தார். எனவே கடையின் பின்புறம் […]
