சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் கீர்த்தி ராஜ், தனஸ்ரீ தம்பதி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற போது, இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்மூலம் பிரபலமாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். கணவரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மனைவியை சமாதனம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் […]
