ஆடி மாதத்தையொட்டி மதுரையில் ‘ஆடி அம்மன் சுற்றுலா’ நடத்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஓட்டலில் துவங்கும் இச்சுற்றுலா மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், வெட்டுடையார் காளியம்மன் கோயில், அழகர்கோயில் ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அனைத்து கோயில்களின் பிரசாதமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்திலான இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் www.ttdconline.com என்ற இணையத்தில் […]
