பாஜக-வில் சர்ச்சை ஆடியோ வெளியாகிய விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யாசிவா போன்றோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நிரூபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது “அண்மையில் வெளியாகிய ஆடியோ விஷயம், எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். எனினும் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டுவந்து விட்டோம். இவற்றில் யாருடைய வற்புறுத்தலும் […]
