கர்நாடக மாநில கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி டவுன் அருகில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அதிகமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் பெற வருகை புரிவார்கள். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அஞ்சனாத்திரை மலைப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி […]
