உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகளின் மீது காரை ஏற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என […]
