தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த மாதம் 16ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.அதன் பிறகு இரண்டு முறை போராட்டத்தை நடத்தியுள்ளார். திமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் பிரமாண்ட யாத்திரையை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். யாத்திரைக்கு ஆசிர்வாத் யாத்ரா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக எந்தெந்த […]
