ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள எரிச்சி பகுதியில் வசித்து வரும் விஜிகித்தேரி(49) என்பவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட இணையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது 1% வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக இருந்தது. இதனைப் பார்த்த விஜிகித்தேரி அதில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் […]
