சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சூராணம் கிராமத்தில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கார்ளா என்ற மகள் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு சிவகங்கை உள்ள பள்ளியில் தங்கி […]
