தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பணியிட மாறுதல் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும் என்று தகவல் வெளியான நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
