கடலூர் மாவட்டத்தில் உள்ள கூடுவேலி சாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கண்ணகி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என கூறி 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் தலையில் கண்ணகி அலுவலக பயன்பாட்டிற்காக இருக்கும் பைல் போல்டரில் வரும் பிளாஸ்டிக் குச்சியை வைத்து அடித்து திட்டியுள்ளார். இதனை ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனை அறிந்த போலீசார் மாணவனின் பெற்றோரை அழைத்து […]
