தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதாவது தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் […]
