ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமணி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி மற்றும் செந்தாமரை என்ற இரு மனைவிகள் இருக்கின்றனர். தற்போது கலைச்செல்வி பெங்களூரில் வசித்து வருகிறார். இதனை அடுத்து செந்தாமரை செய்யாறு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் தனிமையில் இருந்த பழனி மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
