தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள ஆவடையனுர் சிதம்பரம் நாடார் தெருவில் அருணாச்சலம்(88) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளவர்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ராணி பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினியராக உள்ளார். மற்ற இரண்டு பேரும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் […]
