பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அதன்பிறகு பிடிக்கப்பட்ட தொகையுடன் அரசு கூடுதல் தொகை செலுத்தி அரசு ஊழியர்களின் […]
