12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் முதல் கட்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்து கொண்டனர். இதன் இரண்டாம் கட்ட போராட்டமானது அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அமர்நாத் […]