மோசடி செய்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி காலங்கரை தெருவில் லீனா(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரவநல்லூரில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லீனாவும், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஆசிரியர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. […]
