தனியார் பேருந்து மோதி பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதிருப்பு கிராமத்தில் பள்ளி ஆசிரியரான தண்டிலிங்கம் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் தண்டிலிங்கம் செல்லப்பநேந்தல் விளக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து தண்டிலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தண்டிலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
