Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இன்று(ஜூன் 6) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“எண்ணும் எழுத்தும் திட்டம்”….. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலமாக ஆசிரியருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்கள் பயிற்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத […]

Categories
மாநில செய்திகள்

“கட்டாயம் பள்ளிக்கு வரவும்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சிக்குப் பின் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூன் 14ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறை நிறைவு…. ஜூன் 6ல் பள்ளிக்கு வரவும்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…. !!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு….. “கோடை விடுமுறை குறைப்பு”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு….. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் இந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கு வருகிற 31-ந் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வுகள் முடிவடைவதற்குள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. விடைத்தாள்களை ஆசிரியர்கள் மன உளைச்சல் இன்றி திருத்த ஏதுவாக பல சலுகைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. அதில் ஒன்றாக ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே(மே 25) கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி விருப்பப்பட்டவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கப்படுவதில்லை. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஒருநாள் காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினர். அதனால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருந்த மக்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மே-20 ஆம் தேதிக்குள் முடித்துவிட்டால்…. பள்ளிக்கு வர தேவையில்லை…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்ற   பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இன்றோடு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 20 வரை….. கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்….. பள்ளிக்கல்வித்துறை ஆணை….!!!!

மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிவடைகிறது. இதனால் நாளை முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்லையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்துவது, அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் வரும் 20ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு: மாட்டிக்கொள்ளும் ஆசிரியர்களை இப்படி செய்வீங்களா?…. கேள்வி எழுப்பிய தேவநேயன்….!!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சென்ற ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து நடந்து வந்தது. அதன்படி நேற்றைய விவாதத்தின் போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “வரும் கல்வி ஆண்டிலிருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பிறகு பாடங்கள் நடத்தப்படும். இன்றைய காலக்கட்டத்தில் கவனச் சிதறல்கள் அதிகரித்து இருக்கிறது. மனஅழுத்தத்தில் உள்ள குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையில் எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது என்பது தவறான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….. கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….. அப்படி என்ன சொன்னாங்க….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் திமுக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…. செம மகிழ்ச்சியில் தமிழக ஆசிரியர்கள்…!!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொரடாச்சேரி ஒன்றியத்தின் சார்பாக எழுவரும் விழா புலிவலம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தார். பின்னர் பேசிய அவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக ஆசிரியர் மன்றம் சார்பில் 148 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் 100 க்கும் அதிகமானவை நியாயமான கோரிக்கைகள் தான். எனவே அவர்களுடைய கோரிக்கைகள் விரைவாக விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதுவரை பொறுமையாக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

நெருங்கும் பொதுத்தேர்வுகள்…. 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் “இல்லம் தேடி கல்வி” திட்டம் வெற்றி…. ஆசிரியர்களுக்கு பாராட்டு….!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை சரி செய்யும் விதமாக “இல்லம் தேடி கல்வி” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் 278 மையங்களில் “இல்லம் தேடி கல்வி” திட்டம் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் புத்தகத்தின் மூலம் புரிய வைக்க முடியாத பாடங்களை கூட மாணவர்களுக்கு கண்காட்சி மூலம் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 9 மாதம் விடுப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!!

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெற்று பராமரிக்கும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்பது மாதம் விடுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படை வீட்டுமனை பட்டா தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…. தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!!!

அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு  தகுதியானவர்களின் விவரங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்துள்ளது. நடப்பாண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, கடந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை?… தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் சென்ற 2 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இப்போது தமிழகத்தில் சற்று கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

படிக்க நாங்க தயார்…. ஆசிரியர் எங்கே?…. கேள்வி எழுப்பும் மாணவர்கள்….!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் கட்டாயம் வெளிநாட்டு மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அந்த மொழிகளை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருக்கவேண்டும். ஜெர்மன், பிரான்சிஸ், சீன, ஜப்பானிய மொழிக்கான ஆசிரியர்கள் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதற்கான ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே மாணவர்கள் அதனை கற்றுக் கொள்ள முடியும். இதனால் மொழிகளுக்கான ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெளியான புதிய அரசாணை… அதிர்ச்சியில் உறைந்த பள்ளி ஆசிரியர்கள்…!!!!!

பள்ளி ஆசிரியர்களை அச்சத்தில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய  தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!! உயர் கல்வி ஊக்கத்தொகை உயர்வு…?? வலுக்கும் கோரிக்கை…!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்த அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்குப் பின்னர் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த ஊக்கத்தொகை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் திட்டத்தால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் கீழமேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வி.பி.நாகைமாளியை சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதோடு ஆசிரியர்களின் உயர்க்கல்வி ஊக்க தொகையை நிறுத்தினால் அவர்களுடைய உயர்கல்வி ஆர்வம் குறையும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கும் ஆசிரியர்கள்…!! அதிகாரிகள் கொடுத்த விளக்கம்…!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இயங்கிவரும் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் சில குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

வெளியான புதிய அரசாணை…. அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்…!!!!

பள்ளி ஆசிரியர்களை அச்சத்தில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய  தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்கள்…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து 2004ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அத்துடன் 2006ஆம் ஆண்டு பணி வரன்முறை செய்யப்பட்டார். அவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்ககோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 2019 ஆம் வருடம் நிராகரித்தார். இதையடுத்து அவரது உத்தரவை ரத்துசெய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக் கோரி முத்து உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை உள்ள நாட்களில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்கள் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துதல், 7 வது ஊதியக்குழுவில் படி  பரிந்துரைப்படி 2014 ஆம் ஆண்டு முதல் இருபத்தி ஒரு மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல், சிறப்பு காலமுறை […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்வறைக்குள் அனுமதி இல்லை”…. 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகத்தில் தேர்வறைக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று விதித்திருந்த தடையை உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளிகளில் தற்போது பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் மாநில கல்வித்துறை ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 40க்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உடனே…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மாறுதல் வழங்கப்பட்ட பள்ளியில் உடனே சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் இருந்து உடனே விலகி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர வேண்டும். பணியாணை கிடைக்கப் பெற்றும் அதே பள்ளியில் ஆசிரியர்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!!

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு கடந்த மார்ச் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், அதற்கான நிதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-வினர் ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்த முழு பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்துதுறை சார்ந்த நிதி ஒதுக்கீடும் இடம்பெற்றது. அதாவது, உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்கு ரூபாய் 200 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. பள்ளிக் கல்வித்துறை முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால் வழங்கப்படும் சான்றிதழ் தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 7 வருடங்கள் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும். கடந்த மாதம் கணினி பயிற்றுனர், […]

Categories
மாநில செய்திகள்

TN TRB விரிவுரையாளர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடத்தப்பட்ட பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனுபவ சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித தேர்வுகளையும் நடத்தவில்லை. இதன் காரணமாக காலிப்பணியிடங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கோடை விடுமுறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக பரவிய  கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. அதனால் வருடம்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகள் விபரங்கள்…. அதிருப்தியில் தலைமை ஆசிரியர்கள்…..!!!!!

எமிஸ் எனும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் மாநில அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு வருகைதரும் நாட்களில் இருந்து மாணவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் அந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இந்தக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் ஆசிரியர்கள் அவ்வப்போது பதிவு செய்து கொண்டே உள்ளதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஆர்வம் செலுத்த முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பணிச்சுமையை குறைக்க தனியாக வெப்சைட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய எச்சரிக்கை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று  குறைந்த சூழலில் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பரவிய  ஓமைக்ரான்  தொற்று காரணமாக தமிழகத்தின் மூன்றாம் அலையின்  தாக்கம்  தொடங்கியது.அதனால் கொரோனாவை  கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்வதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ்  சுப்பிரமணியம் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!

2022-23 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதில் குறைந்த பலனே உள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக  போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் […]

Categories
மாநில செய்திகள்

விடியலை எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்கள்…. என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?…!!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தோடு  கல்வி இணைய  செயல்பாடுகளும் தேவை என்ற  அடிப்படையில் கணினி, அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, கட்டடக்கலை, வாழ்வியல் கல்வி கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2012ஆம் ஆண்டு நியமித்த போது இவர்களுக்கு வழங்கிய 5000 தொகுப்பூதியமானது 2021 ஆம் ஆண்டு 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மரணம் ஓய்வு என 4000 பேர் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் விரும்பினால் மட்டுமே”… ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!!

அரசு பள்ளிகளில் எமிஸ் பதிவு முறை தொடர்பான கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’  என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் […]

Categories
மாநில செய்திகள்

9 முதல் 12-ம் வகுப்பு வரை…. அனைத்து ஆசிரியர்களுக்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க இருக்கிறது. பயிற்சிக்கான காணொளிகள் செயல்பாடுகள் நிறுவனம் உள்ளடக்கப்பட்டு 12 கட்டங்களாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 246 பள்ளிகள் இருக்கிறது. அதில் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபகாலமாக அரசு பள்ளிகளில தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில புதிய உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

9-12 ஆம் வகுப்பு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வரும் 14 ம் தேதி முதல்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பிப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கு…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!!

தமிழகத்தில் பட்ஜெட் வருகிற மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதாவது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, தொழில்துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதால் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15-க்குள் ஆவணங்களை பதிவேற்ற உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணி இடத்தில் 1060 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

பட்ஜெட் தாக்கலில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்புகள்?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?…..!!!!

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ,ஆசிரியர்களுக்கு, தொழில் துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை […]

Categories
மாநில செய்திகள்

“மாதவிடாய் குறித்த கேள்வி”…. தமிழக ஆசிரியைகளை அதிர வைத்த கல்வித்துறை…!!!

பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.  புதிதாக  ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  செயல்பாட்டால் ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தினமும் பாடம் நடத்தும்  நேரத்தை விட எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க  ஆசிரியர்கள் பல மணி நேரம் போராட வேண்டி  உள்ளது.  இதன் ஒரு கட்டமாக மாணவ மாணவியரிடம் வகைகளில் 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு […]

Categories
மாநில செய்திகள்

உபரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை மேற்கொள்ள  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை வருகிற 14-ஆம் தேதி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இது பற்றி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும். இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு… கலந்தாய்வில் புதிய வழிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மார்ச் 14-ஆம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு  நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்  பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தொடங்கியுள்ளதால் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு  வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. அரசு கிடுக்கிப்பிடி அறிவிப்பு…!!!

வருகிற 20-ஆம் தேதி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் மற்றும் குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி ஏற்பட்ட குழுவை பள்ளி மேலாண்மை குழு வாங்கும் அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்க முடிவு…. மாநில அரசு எடுத்த ஷாக் முடிவு…!!!!

தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 10 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பான புதிய கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா  பாதிப்பு குறைய தொடங்கியதை  தொடர்ந்து வழக்கம்போல பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதனால் […]

Categories

Tech |