தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் பட்டியல்களை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவிவாரியான தேர்ந்தோர் பட்டியலை கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி தயார் செய்ய வேண்டும். […]
