ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தது. இந்த தோல்வி வாயிலாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து இருக்கிறது. இனி பாகிஸ்தான் உட்பட பிற அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது “நேற்றைய போட்டியில் எங்கள் அணி 10-15 ரன்கள் வரை குறைவாக […]
