சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அம்மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகவில்லை. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு […]
