நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் மையம் விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அருகே உள்ள சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் […]
