திருநெல்வேலியிலிருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலியிலிருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும், கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சையை அளிக்கும் மையங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு கிடைக்க பலவிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனத்திலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக பெறுகிறது. அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நெல்லை அரசு மருத்துவமனைக்கும், கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கும், ஊரகப் பகுதிகளிலிருக்கும் கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சையை அளிக்கும் மையங்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு […]
