நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் […]
