நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் சேலம் உருக்காலைக்கு ஆக்சிஜன் கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா வைரஸின் 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மருத்துவமனை சார்பில் […]
