நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதற்க்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வந்ததால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வந்தது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க தூத்துக்குடியில் ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. […]
