ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளின் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி பகுதியில் பூதநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் ராமசாமியின் வீட்டை அகற்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் பொன்னாம் பட்டி பேரூராட்சி […]
