மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நுழைவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அதில் சிதம்பரம், சென்னை, பூம்புகார், கும்பகோணம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையம் வந்து செல்லும். ஒருநாளைக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகரின் முக்கியமான இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்திற்கு இதனால் ஆயிரக்கணக்கான […]
