காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன் அரசு நிலம் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால் லட்சுமிபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய்த்துறை […]
