புதுக்கோட்டையில் தனது கடையின் மேஜை அகற்றியதால் பூ வியாபாரி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும். அப்படி அகற்றவில்லையென்றால் நாங்களே அகற்றி விடுவோம். அதன்பின் சம்பந்தப்பட்டவரிடம் அதற்கான செலவு தொகை வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை நகரின் முக்கிய பஜாரான கீழ ராஜ வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி […]
