கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பாதை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 -ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி நிர்வாகிகள் இடிக்க சென்ற போது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீடுகளை தாமாக இடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நகர […]
