திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சார கூட்டத்தில் மக்கள் விரும்பும் அ.தி.மு.க. நல்லாட்சி மீண்டும் மலரும் என்று பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது முக்கிய தலைவர்கள் மற்றும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடி பழனி பைபாஸ் ரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தந்தை, மகன், பேரன் என மன்னராட்சியை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. கொள்ளை அடிப்பது மட்டும் […]
