திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகே தி.மு.க.வைச் சேர்ந்த ரவி, அ.தி.மு.க.வை சேர்ந்த குமரேசன் ஆகியோர் இடையே வாக்கு சேகரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் குமரேசன் வீட்டிற்கு ரவி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கடந்த 6-ஆம் தேதி சென்றுள்ளனர். மேலும் […]
