மதுபான பாரில் லாட்டரி சீட் விற்ற அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் டி.எஸ் கோபால் நகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க பிரமுகரான ஜோஸ்வா(50). இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி குடியிருப்பு ரோட்டில் சொந்தமாக மதுபான பார் இருக்கிறது. இந்த மதுபான பாரியை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அந்த பாரில் மது அருந்த வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வாங்க கட்டாயப்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. […]
