அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் கருப்பு உடை அணிந்து கொண்டு வந்தனர். இவர்கள் திடீரென தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு கூட்டத்தையும் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
