கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளிப்படுத்துவதில் தாமதித்த 40 மையங்களுக்கு 20 லட்சம் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் மையங்கள் சிலவற்றில் மக்களின் கொரோனா […]
