ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வந்த் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவிற்கு தற்போது 38 வயது ஆகிறது. அவரின் திரையுலக அனுபவம் 37 வருடங்கள். அதாவது, சிம்பு தன் ஒரு வயது முதல் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனினும், “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மாஸாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து, மன்மதன் திரைப்படம் மீண்டும் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. […]
