அவ்வையார் வேடமணிந்த ஆசிரியை மாணவர்கள் பள்ளியில் சேர்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு பலரின் பாராட்டை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் பள்ளியில் கிறிஸ்டி ஜோதி என்ற ஆசிரியை வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் இணையவழிக்கல்வி மற்றும் தொலைக்காட்சியில் கல்வி சேனல்கள் வழியாகவும் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து பயில்வதற்கான […]
